This page has been proofread, but needs to be validated.
TAMIL PROVERBS.
487
  1. மன்னவர்கள் ஆண்டது எல்லாம் மந்திரிகள் ஆண்மை.
    The government of kings depends on the vigor of their councillors.

  2. மன்னவர்க்கு அழகு செங்கோன் முறைமை.
    A sceptre of justice is the beauty of a king.

மா.

  1. மா இருக்கிற மணத்தைப் போல் அல்லவோ கூழ் இருக்கிற குணம்.
    As is the flour so is the gruel.

  2. மா உண்டானால் பணிகாரம் சுடலாம்.
    If there be flour, cakes may be baked.

  3. மா ஏற மலை ஏறும்.
    The accretion of a particle to a mountain increases its size.

  4. மாடு திருப்பினவன் அர்ச்சுனன்?
    He who drove back the cows was Arjuna.

  5. மாடு தின்னிக்கு வாக்குச் சுத்தம் உண்டா?
    Is a beef-eater accustomed to decent words?

  6. மாடு முக்கிவர வீடு நக்கிவரும்.
    When cows return fatigued the household will suffer want.

  7. மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.
    Without pasture cows die; without care vegetation perishes.

  8. மாட்டின் வாழ்க்கை மூட்டையிலே.
    A bull's term of existence is in his sack.

  9. மாட்டுக்குப் பெயர் பெரிய கடா என்று.
    A cow is otherwise called a large he-goat.