விக்கிப்பீடியா:குறுங்கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் விக்கிப்பீடியா இணைய தளத்தில் ஒரு பத்தி அளவிலோ, அதற்குக் குறைவான அளவிலோ உள்ள கட்டுரைகள் 'குறுங்கட்டுரைகள்' என வகைப்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான குறுங்கட்டுரைகள், கட்டுரை தலைப்பு குறித்த சிறிய, ஆர்வத்தைத் தூண்டும் துணுக்குகளைத் தருவதோடு முழு வடிவம் பெறாமல் இருக்கின்றன. நீங்கள் இந்த மாதிரி குறுங்கட்டுரைகளை இனங்கண்டு, அந்தந்த பக்கங்களில் மேலும் அதிக விவரங்களைத் தொகுப்பதன் மூலம் அவற்றை முழுமையடையச் செய்ய உதவலாம்.

குறுங்கட்டுரை அறிவிப்பு !

குறுங்கட்டுரை காட்டி

நீங்கள் ஒரு கட்டுரையை காணும்போது, அது 'குறுங்கட்டுரை' என்று எண்ணினால், பின்வரும் 'காட்டி'-யைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்:{{stub}} இவ்வாறு இட்டால், கீழே தெரியும் குறுங்கட்டுரை அறிவிப்பு, தானாகவே தோன்றிவிடும்.

இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

இவ்வாறு அறிவிப்பது அனைவரையும் அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாக அமையும்.

துறை சார்ந்த குறுங்கட்டுரைகள்

ஒரு கட்டுரையை, ஒரு துறை சார்ந்த குறுங்கட்டுரையாக வகைப்படுத்த இயலும் என்று நீங்கள் எண்ணினால், பின்வரும் 'காட்டிகளில்' (Tags) பொருத்தமாக இருக்கக்கூடியவற்றைக் கட்டுரையின் முடிவில் இணைக்கவும்.

  • {{wiki-stub}} - விக்கிப்பீடியா தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{year-stub}} - ஆண்டுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{day-stub‎}} - நாட்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{tamil-stub}} - தமிழ் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{பௌத்த குறுங்கட்டுரை}} - பௌத்தம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{country-stub}} - நாடுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{SriLanka-road-stub}} - இலங்கை வீதிகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{architect-stub}} - கட்டிடக்கலை தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{book-stub}} - நூல்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{movie-stub}} - திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{writer-stub}} - எழுத்தாளர் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{poet-stub}} - கவிஞர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{sports-stub‎}} - விளையாட்டு தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{biochem-stub}} - உயிர்வேதியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
  • {{மருத்துவம்-குறுங்கட்டுரை}} - மருத்துவம் தொடர்பான குறுங்கட்டுரைகள்
  • {{bio-stub}} - உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
    • {{stub-botany}} - தாவரவியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்
    • {{Herb-stub}} - மூலிகைகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்

இவ்வாறு அறிவிப்பது, பங்களிப்பாளர்கள் தத்தம், விருப்பத் துறைகளில் உள்ள குறுங்கட்டுரைகளை எளிதில் இனங்கண்டு, அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாய் அமையும்.

எப்படி குறுங்கட்டுரைகளின் பட்டியலை அறிவது ?

  • விக்கிப்பீடியா தேடல் பெட்டியில் {{stub}} என்று உள்ளிட்டுத் தேடுவதன் மூலம் குறுங்கட்டுரைகளை பட்டியலிடலாம். (விக்கிப்பீடியா தேடு பொறி இயக்கத்தில் இல்லையெனில் இந்த முறை பயனளிக்காது.)
  • கூகுள் அல்லது யாகு தேடு தளத்தில் 'இக்கட்டுரை வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும்' என்ற வாக்கியத்தை உள்ளிட்டுத் தேடுவதன் மூலம் குறுங்கட்டுரைகளை பட்டியலிடலாம்.