முகப்புகோலிவுட்

கௌதம் மேனனின் கதாநாயகி எப்படி படங்களை காதலிக்க ஆரம்பித்தார்

  | March 13, 2017 16:41 IST
Celebrities

துனுக்குகள்

  • சைனா திரைப்படம் தான் என்னுடைய அறிமுகம்
  • கெளதம் மேனன் இயக்கத்தில் நடிப்பது பல நடிகைகளின் கனவு
  • நடிப்பு என்பது போதையை போன்றது. அதை நான் மிகவும் விரும்புகின்றேன்
நாம் அன்றாட வாழ்வில் கடந்து வரும் காதல் நினைவுகளை திரையில் பதிவு செய்வதில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பெயர்போனவர். அவருடைய படங்களில் கதாநாயகிகளின் கதாபாத்திரங்கள் வலிமையானதாகவும், வித்தியாசமானதாகவும் அதே நேரத்தில் திரையில் பார்க்கும் பொழுது அழகாகவும் இருக்கும். அவர் தன்னுடைய படம் குறித்த அறிவிப்பினை வெளியிடும் ஒவ்வொரு முறையும், அந்த படத்தில் நடிக்கும் கதாநாயகியை குறித்த மிகப்பெரும் ஆர்வம் நம்முள் எழும். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தற்பொழுது "துருவ நட்சத்திரம்" என்ற படத்தின் மூலம் ரீத்து வர்மா என்ற நடிகையை அறிமுகப்படுத்தவிருக்கிறார். இவர் தெலுகில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற "பெல்லி சுப்புலு" என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். கெளதம் வாசுதேவ் மேனனின் புதிய கதாநாயகியுடன் ஒரு சிறிய கலந்துரையாடல்.

"எங்கள் குடும்பம் அடிப்படையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆனால் நாங்கள் தற்பொழுது வசித்துவருவது ஹைதராபாத்தில், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கு தான்"

தமிழில் அறிமுகமாகும் படத்திலேயே விக்ரமுடன் ஜோடி சேர்ந்திருக்கும் ரித்து வர்மா படப்பிடிப்புக்கு நடுவே நம்மிடம் பேசினார். இன்ஜினியரிங் பட்டதாரியான ரித்து வர்மா ஒரு நடிகையாக வருவாரென்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லையாம்." நான் என்னுடைய பள்ளி பருவத்தில் மிகவும் கூச்ச சுபாவம் உடையவள். என்னுடைய பள்ளியில் நடக்கும் விழாக்களில் நடனம், ஓவியம் போன்ற போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன் ஆனால் பெரிய திரையரங்குகளில் நடனமாடியதோ, நடித்ததோ கிடையாது. நான் நடிப்பேனென்று கனவிலும் நினைத்தது கிடையாது ஆனால் என்னை பார்க்கும் பலரும் எனக்கு ஃபோட்டோஜெனிக் ஃபேஸ் என்று கூறுவார்கள்" என்று ரித்து வர்மா தன்னுடைய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அழகான தோற்றமும், சரியான உயரமும் இருந்ததால் அவருடைய அம்மா, அழகி போட்டியில் ரித்து வர்மாவை கலந்து கொள்ள செய்துள்ளார். அந்த போட்டியில் இரண்டாம் இடம் வந்துள்ளார் ரித்து . "அந்த ஒரு நிகழ்விற்கு பின் தான் மாடலிங், பேஷன் ஷோ போன்ற வாய்ப்புகள் அதிகம் வர தொடங்கியது"
விதி நடிப்பதற்கு முன்பே கேமரா மற்றும் கேமரா சார்ந்த விஷயங்களை நோக்கி அவரை நகர்த்தியுள்ளது. "பெல்லி சுப்புலு" திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பே இயக்குநர் தருண் பாஸ்கர் என்னுடைய நண்பர். அந்த நேரத்தில் அவர் இயக்கிய குறும்படத்தில் என்னை வற்புறுத்தினார். நான் அவரிடம் நடிப்பை பற்றி ஏதும் தெரியாதென்று கூறினேன். ஆனால் நான் தான் அவருடைய கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பேனென்று அவர் எண்ணினார். அதன் பிறகு அவர் இயக்கத்தில் நான் நடித்த "அணுகொகுண்ட" என்ற அந்த பத்து நிமிட குறும்படம் போட்டிகளில் முதலிடம் பிடித்தது பின் "கேன்ஸ்" திரைப்பட விழாவிலும் அந்த குறும்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வரத்தொடங்கின. அந்த நேரத்தில், படங்களில் நடிக்கலாமா அல்லது வேண்டாமா? என்ற மன குழப்பத்தில் இருந்தேன். முடிவில் ஒரு முறை நடித்துப்பார்ப்போம் என்ற முடிவிற்கு வந்தேன்" என்று கூறியவாறு சிரித்தார் ரித்து .
 
ritu varma

"ஒரு சில படங்களில் நான் நடித்த பின் தான் "பெல்லி சுப்புலு" திரைப்படத்தில் நடித்தேன், அந்த படம் என்னுடைய சொந்த ஊரான ஹைதராபாத்தில் எனக்கென ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது" தற்பொழுது, ரித்து தன்னுடைய கவனம் முழுவதையும் நடிப்பில் செலுத்தி வருகிறார். "நான் தற்பொழுது நடிப்பதை மிகவும் விரும்புகின்றேன். ஒரு நடிகையாக வேண்டும் என்பது தான் என்னுடைய விதி என்று நினைக்கின்றேன். எப்பொழுது கேமரா முன் நடிக்க தொடங்கினேனோ அப்பொழுது இருந்து அந்த அனுபவத்தை விரும்ப ஆரம்பித்துவிட்டேன்." அந்த அனுபவம் ஒரு நடிகைக்கு ஒரு போதையை போன்றது என்று ரீத்து வர்மா கூறினார். நான் எப்பொழுதும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மேக் அப் போட ஆரம்பித்தவுடன் நான் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவேன். நடிப்பின் மூலம் கிடைக்கும் சந்தோசமான உணர்வு வேறு எதிலும் கிடைக்காது! சினிமா என்னை கண்டறிந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது"

ரித்து வர்மா, தெலுகுவில் நிக்கில் சித்தர்தாவுடன் "கேசவா" என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ரித்து வர்மா "சைனா" என்ற படத்தில் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்துள்ளார். "சைனா" படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். "சைனா" திரைப்படத்தில் நடுத்தர குடும்ப கிறித்துவ பெண்ணாக நடித்துள்ளேன். இப்படம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. பெல்லி சுப்புலு திரைப்படத்திற்கு முன்பு, "சைனா" இயக்குநர் ஹர்ஷவர்தன் நான் நடித்த "யெவ்வட" திரைப்படத்தின் டிரையிலரை பார்த்துவிட்டு என்னை அழைத்து பேசினார். அப்பொழுது தமிழ் மொழி எனக்கு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது ஆனால் இயக்குநர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

எந்த நடிகையாக இருந்தாலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரம் போன்றோருடன் நடிப்பதை நினைத்து உற்சகமாக இருப்பார்கள். துருவநட்சத்திரம் திரைப்படம் குறித்து நாம் கேட்ட கேள்விக்கு படத்தை பற்றி எந்த விஷயங்களையும் ரித்து பகிர்ந்துகொள்ளவில்லை. "படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது" என்பதை மட்டும் தான் ரித்து நம்மிடம் கூறினார். தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதுண்டா? "தமிழ் சினிமாவில் அனைத்து கதைகளும் பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வமாக உள்ளது. தமிழ் சினிமாவில் நடிப்பதை நினைத்து மிகவும் உற்சாகமாக உள்ளது. வலிமையான கதாபாத்திரங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றேன்". தற்பொழுது வெளியாகி வரும் அனைத்து படங்களையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன், என்று கூறி நம்மிடம் இருந்து விடைபெற்றார் ரித்து வர்மா.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்